100 நாள் வேலைத் திட்ட ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 14) கடிதம் எழுதியுள்ளார். 100 days work plan balance
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமான 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்கப்பட வேண்டிய ரூ.1678 கோடி ரூபாய் இன்னும் வழங்கப்படவில்லை.
இதுதொடர்பாக மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,
“தமிழ்நாட்டில் இந்த திட்டத்தில் 68.68 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 79.28 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் 06.11.2024 வரை தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ஊதியமான ரூ.8,734.32 கோடியில், ரூ.7,712.03 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களுக்கான ஊதியப் பொறுப்பு 05.01.2024 அன்று ரூ.1,022.29 கோடியாக உள்ளது.
இது தொடர்பாக 10.01.2024 அன்று ஊதியத்தை முன்கூட்டியே வழங்குமாறு மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியதையடுத்து, மத்திய அரசு 15.01.2024 மற்றும் 30.01.2024 ஆகிய நாட்களில் ரூ.1,388.91 கோடி ஊதியத்தை விடுவித்தது.
மேலும், நவம்பர் 2023 கடைசி வாரத்திலிருந்து திறன்சாரா தொழிலாளர்களுக்கான ஊதியம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாததால், அதன் பொறுப்புத் தொகை ரூ.1,678.83 கோடியாக சேர்ந்துள்ளது.
இது டிசம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த 24.21 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது.
05.01.2024 வரை திரட்டப்பட்ட மொத்த ஊதிய பொறுப்புத் தொகையான ரூ.1,678.83 கோடியை தொழிலாளர்களுக்கு உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
-இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
AK 63: ‘கொல மாஸ்’ 22 ஆண்டுகளுக்கு பிறகு… அஜித் செய்த சம்பவம்!
போதைப்பொருள் விவகாரம்… எடப்பாடி மீது மான நஷ்ட ஈடு வழக்குத் தொடர்ந்த திமுக!
Lokesh Kanagaraj: ‘ரியல் வெறித்தனம்’ டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் லோகேஷ்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு… உச்ச நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி மேல்முறையீடு!