கிராமப்புற மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக 100 நாள் வேலைத் திட்டம் உள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற 100 நாள் திட்டம் தொடர்பாக புதிய அறிவிப்பை பட்ஜெட்டில் நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் நிதியாண்டில் (2023-24) மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் அதாவது 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார்.
இன்று (மார்ச் 20) பட்ஜெட் வாசித்த அவர்,
“இந்த ஆண்டு இதுவரை மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்துக்காக 10 ஆயிரத்து 914 கோடி செலவில் சுமார் 31 கோடி வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
வரும் நிதியாண்டில் 35 கோடி வேலை நாட்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ஊரக வளர்ச்சித் துறைக்கு 22 ஆயிரத்து 562 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது” என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
-வேந்தன்
புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கீடு!
”ஐபிஎல் 2023 தோனிக்கு கடைசி போட்டி கிடையாது”: ஷேன் வாட்சன்