வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை கேட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஏப்ரல் 17) தனது குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார்.
10.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பாமக எதிர்ப்புத் தெரிவித்தது.
கூடிய விரைவில் 10.5% உள் இட ஒதுக்கீட்டை கொண்டு வரவேண்டும். அடுத்து வரக்கூடிய கல்வி ஆண்டிலேயே பொறியியல், மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டில் சீட் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
இந்நிலையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமூகத்திற்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை விரைந்து நிறைவேற்ற அனைத்து வன்னியர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுத வேண்டும் என நேற்று (ஏப்ரல் 16) பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார்.
அதில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தால் மே 31ஆம் தேதிக்குள் வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டம் இயற்றுவது சாத்தியமே என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தசூழலில் இன்று தனது குடும்பத்தினருடன் வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வேண்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் , ஆணையத்தின் தலைவர் பாரதிதாசனுக்கும், தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தபால் நிலையத்தில் இருந்து தபால் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
பிரியா
ராணுவ முகாமுக்குள் துப்பாக்கிச் சூடு: கைதானவர் வாக்குமூலம்!
அணைந்து போன நெருப்பு: அதிமுகவை விமர்சிக்கும் அண்ணாமலையின் வலதுகரம்