எடப்பாடிக்கு ஷாக் கொடுக்கும் ஓபிஎஸ்: தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்!

அரசியல்

எடப்பாடி பழனிசாமி உட்பட 22 பேரை நீக்கியது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு பன்னீர் செல்வம் ஃபேக்ஸ் அனுப்பியுள்ளார்.

அதிமுகவின் தலைமை பொறுப்பை யார் கைப்பற்ற போவது என போட்டி நிலவி வந்த நிலையில்  முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் உட்பட 18 க்கும் மேற்பட்டோர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதற்கு பதிலடி தரும் வகையில் களமிறங்கிய ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி உட்பட 22 பேரை நேற்று இரவு கட்சியில் இருந்து நீக்கினார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கட்சி கொள்கை, குறிக்கோள்களுக்கும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி,டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, , ஆர்.பி.உதயகுமார், ஆதி ராஜாராம், தி.நகர் பி.சத்யா, எம்.கே.அசோக், செல்லூர் கே.ராஜூ உள்ளிட்ட 22 பேர் ஜூலை 15 முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தாங்கள் தான் உண்மையான அதிமுகவினர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் 22 பேரை நீக்கிய ஆவணங்களை ஃபேக்ஸ் முலம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் இன்று காலை அனுப்பி வைத்துள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்ட வழக்கு இன்று (ஜூலை 15) மதியம் விசாரணைக்கு வர உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனிவாசன்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *