2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவை அறிவிப்பதற்கு முன்னர் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று (மே 19) அறிவித்தது. இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்து கொள்ளலாம், அல்லது மாற்றிக் கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மே 20) புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “ரிசர்வ் வங்கி இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் போது சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்க வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு.
மாநில அரசாக இருந்தாலும் சரி, பொதுமக்களாக இருந்தாலும் சரி, இதுபோன்ற முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும்.
இனி வருங்காலங்களில் ரிசர்வ் வங்கி இது போன்ற முடிவுகளை எடுக்கும் போது மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். முன்னதாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட போது எப்பட பொருளாதாரம் பாதித்தது.
எனவே தான் ஒரு நடவடிக்கை எடுக்கின்ற போதும் அதற்கு மாறுபட்ட நடவடிக்கையை எடுக்கின்ற போதும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று சொல்கின்றோம்” என்று பேசினார்.
மோனிஷா
“பாசமா எல்லாம் வேஷம்” : மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!
500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்!