நள்ளிரவில் சென்னை வந்த அமித்ஷா

அரசியல்

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (நவம்பர் 12) நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் நேற்று இரவு சென்னை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் அமித்ஷாவிற்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நேற்று இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமித்ஷா ஓய்வெடுத்தார்.

அமித்ஷா வருகையை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இன்று காலை 11 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் இந்தியா சிமெண்ட்ஸ் 75-ஆம் ஆண்டு பவள விழா நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்து கொள்கிறார்.

மதியம் 3 மணியளவில் தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு செல்லும் அமித்ஷா, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

சென்னையிலிருந்து மீண்டும் தனி விமானம் மூலம் இன்று மாலை அமித்ஷா டெல்லி செல்ல உள்ளார்.

இந்தநிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சென்னையில் அமித்ஷாவை தனித்தனியாக சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

செல்வம்

கனமழை எதிரொலி: 25 மாவட்டங்களுக்கு விடுமுறை!

கிச்சன் கீர்த்தனா: முடக்கத்தான் கீரை – காய்கறி பணியாரம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0