ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையிலான பொருட்கள் அவரின் நாமினியான பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்டது என்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிலளித்துள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஜெயலலிதா வீட்டில் சோதனையிட்டு விலை உயர்ந்த பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த பொருட்கள் அனைத்தும் வழக்கு நடந்த மாநிலமான பெங்களூரிவில் உள்ள அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட்டு அதில் இருந்து கிடைக்கும் பணத்தை கர்நாடக அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
மேலும், சென்னை ஆலந்துாரில் உள்ள தமிழக லஞ்ச ஒழிப்பு இயக்குனரக எஸ்.பிக்கும் நரசிம்மமூர்த்தி கடிதம் எழுதியிருந்தார்.
இச்சூழலில் இந்த கடிதத்துக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (ஜூலை 14) விளக்கம் அளித்துள்ளனர்.
அதில், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையிலான பொருட்கள் ஜெயலலிதாவின் நாமினியான பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எங்களிடம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஸ்மார்ட் சிட்டி திட்டம்: காமராஜர் குறித்து தமிழிசை பகிர்ந்த சுவையான சம்பவம்!
செந்தில்பாலாஜி வழக்கு: மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பின் 10 முக்கிய பாயின்ட்டுகள்!