Kushboo

சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லும் குஷ்பு- என்னாச்சு உடம்புக்கு?

அரசியல் சினிமா

பாஜகவின் நட்சத்திர முகமாகவும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் இருக்கும் நடிகை குஷ்பு சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பிரச்சாரப் பணிகளில் பெரிதாக ஈடுபடவில்லை.

.இந்த நிலையில், குஷ்பு அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக பாஜக வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைக்கிறது.

தமிழ்நாட்டில் நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை உடையவர் குஷ்பூ. 2010-ல் திமுகவில் இணைந்தார்.

பின்னர் 2014-ம் ஆண்டு திமுகவை விட்டு விலகி, 26 நவம்பர் 2014 அன்று அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அப்போதைய துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்த பிறகு குஷ்பு இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.

பின்னர் 2020 இல் காங்கிரஸில் இருந்து விலகி, குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.அவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார்.2021 சட்டமன்றத் தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் குஷ்பு தென் சென்னை வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று ஆரம்பத்தில் செய்திகள் கசிந்தன. ஆனால், குஷ்புவோ மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படவில்லை. பிரச்சாரக் களத்திலும் அவர் தீவிரமாக ஈடுபடவில்லை.

வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்துதான் குஷ்பு பிரச்சாரக் களத்துக்கு வரவில்லை என்று செய்திகள் வந்த நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு இதற்கான காரணத்தை விளக்கி கடிதம் எழுதினார் குஷ்பு.

அதில், “2019-இல் புது டெல்லியில் நடந்த ஒரு சாலை விபத்தில் தனக்கு வால் எலும்பு முறிவு ஏற்பட்டதால், கடந்த 5 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறேன்.

kushboo tail bone

இதற்கு சிகிச்சை பெற்று வருகிறேன். எனது மருத்துவக் குழுவின் பரிந்துரையின் பெயரில் என்னால் எந்த பிரச்சாரத்திலும் கலந்துகொள்ள இயலவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே 2023 இல் தனக்கு வால் எலும்பில் சிகிச்சை மேற்கொள்ளப் பட இருப்பது குறித்து ட்விட்டரில் தகவல் வெளியிட்டிருந்தார் குஷ்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பின்னணியில் தான் வருகிற ஏப்ரல் 29 ஆம் தேதி சிங்கப்பூரில் இருக்கும் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இது தொடர்பான அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார் குஷ்பு.

அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருப்பதால் அடுத்தடுத்த கட்ட தேர்தல் பரப்புரைகளிலும் குஷ்புவால் கலந்துகொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

-வேந்தன், ரசிகப்பிரியா (மாணவ நிருபர்)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரத்னம் படத்தை வெளியிட விடாமல் கட்டப்பஞ்சாயத்து: விஷால் குற்றச்சாட்டு!

திமுகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி?

”எங்கள் ஓட்டை காணவில்லை” -விரலில் மையுடன் போராடிய பாஜகவினர்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *