குடியரசு துணை தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகதீப் தன்கர் இன்று (ஆகஸ்ட் 11) பதவியேற்கிறார்.
குடியரசு துணை தலைவர் வெங்கய்யாநாயுடுவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. மாநிலங்களைவை உறுப்பினர்கள் அவருக்கு பிரியா விடை கொடுத்தனர். பிரதமர் மோடி வெங்கய்யா நாயுடு குறித்து மாநிலங்களவையில் பேசும் போது அவர் கண் கலங்கினார்.

பாஜக சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் மார்க்கெரட் ஆல்வா 182 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.
பெரும்பான்மையான உறுப்பினர்களின் வாக்குகள் ஜெகதீப் தன்கருக்கு கிடைத்ததால் அவர் வெற்றி பெற்றதாக ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை அறிவிக்கப்பட்டது.
குடியரசு துணை தலைவராக பதவியேற்க உள்ள ஜெகதீப் தன்கர் 2019 முதல் மேற்கு வங்க ஆளுநராக இருந்து வந்தார். பாஜக சார்பில் குடியரசு தலைவராக அறிவிக்கப்பட்டதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
டெல்லியில் இன்று நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜெகதீப் தன்கருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்.
செல்வம்
ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் இருந்து கூட்டுக்களவாணி முதலாளித்துவத்துக்கு.. : பகுதி 7