ஈவிஎம்-ல் வேறு மென்பொருளை ஏற்ற முடியுமா?: முன்னாள் தேர்தல் ஆணையர் பேட்டி!

அரசியல் இந்தியா

நமது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேறு எந்தவொரு மென்பொருளையும் ஏற்ற முடியாது  என்று  முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசாமி தெரிவித்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை விவிபேடு ஒப்புகை சீட்டுடன் 100 சதவிகிதம் ஒப்பிட்டு பார்க்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஏப்ரல்17, 18 ஆகிய தேதிகளில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் “மின்னணு இயந்திரத்தில் புரோகிராமபள் சிப் இருப்பதால் முறைகேடு நடக்க வாய்ப்பிருக்கிறது”என வாதிட்டார்.

தேர்தல் ஆணையம் சார்பில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி செயல்படுகிறது என நீதிபதிகளிடம் விளக்கமளிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள்குறித்து முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசாமி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஈவிஎம் மூலம் சதி வேலைகள் நடப்பதாக குற்றசாட்டுகள் எழுகிறதே? ஈவிஎம் இயந்திரம் நம்பகத் தன்மையானதா? என்று அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிக உறுதியானவை.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் பலமே அது எளிமையாக வடிவமைக்கப்பட்டிருப்பதுதான். ஒருவகையில் ஈவிஎம் என்பது கால்குலேட்டர் என சொல்லலாம்.

இதில் ஒரு புரோகிராமபிள் சிப் பொருத்தப்பட்டுள்ளது. அதில் ஒருமுறை புரோகிராம் செய்யப்பட்டுவிட்டால், பின் எதையும் மாற்ற முடியாது.

தேர்தலுக்கு தயாராகும் போது தேர்தல் ஆணையம் 5 சதவிகித மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து சோதனை செய்யும்.

1,000-1,200 வாக்குகள் கொண்ட மாதிரி வாக்குப்பதிவுடன் சோதனை மேற்கொள்ளப்படும். அதன்பின் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பிறகு ஒரு சோதனை மேற்கொள்ளப்படும்.

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி விவிபேடு 2013ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பயன்படுத்தப்படுகிறது. இது EVM-ன் நம்பகத்தன்மையை அதிகப்படுத்தியுள்ளது.

வாக்குச்சாவடியில் கட்சி பிரதிநிதிகள், வேட்பாளர்கள் முன்பு சோதிக்கப்படும்.

இறுதியாக தேர்தல் தொடங்குவதற்கு முன்னதாக ஒருமுறை சோதிக்கப்படும்.

வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் எதிரான பட்டனை அழுத்தி சோதிக்கப்படும்.

நம்முடைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எதனுடனும் தொடர்புகொள்ளும் திறன் கொண்டவை அல்ல.

அதில் 4கேபி கொண்ட சின்னங்கள் மட்டுமே ஏற்றப்படும். வேறு எதுவும் செய்ய முடியாது. அதில் வேறு எந்த மென்பொருளையும் இடையில் ஏற்ற முடியாது”என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஊழியர்களை நீக்கியது கூகுள்… ஏன் தெரியுமா?

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: திருமா வலியுறுத்தல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *