எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி குறித்து ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். தரப்பில் எழுதப்பட்ட கடிதங்கள் பற்றி சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது முடிவெடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பாலசுப்ரமணியசுவாமி கோயிலில், சபாநாயகர் அப்பாவு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் கோயிலில் நடைபெற்ற பொதுவிருந்தில் கலந்துகொண்டு உணவருந்தினார். இந்த நிகழ்ச்சியில், மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, இந்து ஆலயங்களில் மதிய உணவுத் திட்டம் பக்தர்களின் விருப்பத்துக்கேற்ப சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
அப்போது எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ.பி.ஸை நீக்கி ஈபிஎஸ் கடிதம் அளித்தது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
“இதுதொடர்பாக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது முடிவெடுக்கப்படும், தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் உள்ள விவகாரம் பற்றி நான் பொதுவெளியில் பேச முடியாது என்றும் அப்பாவு கூறினார்.
மேலும் அதிமுக ஒன்றாக, நன்றாக இருக்கவேண்டும் என்பதே அரசின் விருப்பம்” என்றும் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கலை.ரா
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா? அன்பில் மகேஷ் விளக்கம்