அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பின் சாராம்சம் என்ன?

அரசியல்

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று இன்று (ஆகஸ்டு 17) சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முழுவிவரம் தற்போது வெளியாகி உள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பின் முழுவிவரம் தற்போது வெளியாகி உள்ளது.

அதிமுக பொதுக் குழு வழக்கு – தீர்ப்பின் முழுவிவரம்!

 • சட்டத்தின் ஆட்சி என்பது அரசாங்கத்திற்கு மட்டுமல்லாமல் மாநிலத்தில் அரசை நடத்தக் கூடிய கட்சிகளுக்கும் பொருந்தும்.
 • கட்சி சட்ட விதிகளுக்கு முரணாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தினால் கட்சி உறுப்பினர் உரிமை பாதிக்கப்படுகிறது என்றால், அதில் நீதிமன்றம் தலையிட உரிமையில்லை என்ற கருத்தை ஏற்க முடியாது.
 • அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதியின்றி பொதுக்குழுவை கூட்ட முடியாது.
 • தற்காலிக அவைத் தலைவரின் அனுமதியை அடிப்படையாக வைத்து மட்டும் பொதுக் குழுவை கூட்ட முடியாது..
 • கூட்டத்தை கூட்ட அதிகாரம் இல்லாத அவைத் தலைவருக்கு ஐந்தில் ஒரு பங்கினர் கடிதம் கொடுத்துள்ளனர்.
 • ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கடிதம் கொடுத்தாலும் அதில் ஒருவர் மறுத்தாலும் சட்ட விரோதமாக பொதுக் குழுவை கூட்ட முடியாது.
 • சென்னையில் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தகுதியான நபரால் கூட்டப்படவில்லை.
 • ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ஜூன் 23 உடன் காலாவதி ஆகிவிட்டது என்பதை ஏற்க முடியாது.
 • ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டது என்ற வாதம் கற்பனையானது, அடிப்படை ஆதாரம் இல்லாதது.
 • ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டால், அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வகை செய்யும் விதிகள், பொதுக்குழுவை கூட்ட தற்காலிக அவைத்தலைவருக்கு உரிமை வழங்கவில்லை..
 • அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என்பதற்கான புள்ளிவிவர ஆதாரம் எதுவும் இல்லை.
 • இருவரும் நான்கரை ஆண்டுகளாக முதலமைச்சராக, துணை முதலமைச்சராக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் அதிமுகவில் உள்ள ஒன்றரைக்கோடி தொண்டர்களின் மனநிலையை, 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டும் எப்படி பிரதிபலிக்க முடியும்?
 • கட்சி தலைமை விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதேவேளையில், கட்சி தலைமைத் தேர்வு நடைமுறையில் ஏதேனும் விதிமீறல் இருந்தால், அதில் நீதிமன்றம் தலையிட முடியும்.
 • செல்லாத பொதுக்குழு முடிவுகளை அனுமதித்தால், கட்சி தொண்டர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.
 • இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தலைமை மோதல் காரணமாக உள்ளாட்சி தேர்தல்களில் அங்கீகரிக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற முடியவில்லை.
 • எனவே இந்த பொதுக் குழுவிற்கு தடை விதிக்கவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி தன் இடத்தில் சௌகரியமாக அமர்ந்துவிடுவார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட கூட முடியாத சூழ்நிலை ஏற்படும்.
 • ஒற்றை தலைமை விவகாரம் மற்றும் கட்சி விதிகளில் திருத்தம் போன்றவற்றை செய்ய, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட எந்த தடையும் இல்லை.
 • பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கினர், முறைப்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரிடம் பொதுக்குழு கூட்ட அனுமதி கேட்டால் அதனை மறுக்க கூடாது.
 • இருவருக்கும் இடையே பிரச்சனை என்று வந்தால், ஒரு பொது நிர்வாகியை நியமிக்க உயர்நீதிமன்றத்தை அணுகலாம்.

என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கலை ரா., கிறிஸ்டோபர் ஜெமா

பொதுக்குழு தீர்ப்பு : மேல்முறையீடு செய்ய எடப்பாடி தரப்பு ஆலோசனை!

+1
0
+1
2
+1
1
+1
5
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *