விஜய் வாகனத்தைப் பின்தொடர்வோர் கவனத்திற்கு.. காவல்துறை எச்சரிக்கை

By Pandeeswari Gurusamy

|

Published on 4 May 2026, 8:07 AM

Vijay

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் முதல் முறையாகக் கட்சி தொடங்கிய நடிகரும் தமிழக வெற்றிக் கழகதலைவருமான விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். தமிழகம் முழுவதும் தவெக வேட்பாளர்கள் களம் கண்டனர்.

கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பல இடங்களில் விஜய் பிரச்சாரத்திற்குச் செல்லும் போது அவரது வாகனத்தைப் பின்தொடர்ந்தவர்கள் விபத்தில் சிக்கினர்.

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் இல்லம் செல்லும் வழியில் கபாலீஸ்வரர் நகரில் காவல்துறையினர் வாகனங்களை உள்ளே அனுமதி மறுத்துள்ளனர்.

கபாலீஸ்வரர் நகர் வழியில் பேரிகேட் போட்டு தடுக்கப்பட்டுள்ளது.மேலும், “விஜய் வெளியே சென்றால் வாகனத்தைப் பின்தொடரக் கூடாது. மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ரசிகர்கள் அதிக அளவில் கூடக் கூடாது. இருசக்கர வாகனத்தில் சென்று விபத்துக்கள் ஏற்படக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அக்கரை முதல் நீலாங்கரை வரை 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel