எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் கைது!

Published On:

| By Selvam

ரூ.100 கோடி நில மோசடி புகாரில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உடந்தையாக இருந்ததாக காவல் ஆய்வாளர் பிரித்விராஜை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் வாங்கல் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இந்த புகாரின் பேரில் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோரை கேரள மாநிலம் திருச்சூரில் சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர்.

தொடர்ந்து கரூர் அழைத்து வரப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் நேற்று இரவு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆதரவாளர் பிரவீன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டார். பின்னர் விஜயபாஸ்கர் திருச்சி சிறையிலும், பிரவீன் குளித்தளை கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில், 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்கு எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உடந்தையாக இருந்ததாக வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரத்விராஜை சிபிசிஐடி போலீசார் நேற்று இரவு கரூரில் கைது செய்துள்ளனர்.

கரூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பிரத்விராஜ் பணியாற்றியபோது Non Trasable சான்றிதழ் பெறப்பட்டு அதன் மூலம் விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பேரிலேயே பிரத்விராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நிலமோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

கவிஞர் வீட்டில் கைவரிசை: மகாராஷ்ராவில் விநோத சம்பவம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share