கடந்த மே 3-ஆம் தேதி சென்னை காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மதுரை ஆதீனம் மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்றார். police investigate five hours
அப்போது அவரது கார் உளுந்தூர் பேட்டை அருகே சென்றபோது, மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக மதுரை ஆதீனம் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்து கள்ளக்குறிச்சி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. இந்த விபத்தானது முழுக்க முழுக்க மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகன ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து” என்று விளக்கமளித்தது. மேலும், மதுரை ஆதீனம் ஓட்டுநர் செல்வக்குமார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில், கார் விபத்து தொடர்பான காவல்துறையின் அறிக்கை உண்மைக்கு புறம்பானதாகவும், ஒரு சார்புடையதாக உள்ளதாகவும் மதுரை ஆதீனம் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தநிலையில், நேற்று (மே 7) மாலை 5 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் டிஎஸ்பி பார்த்திபன் மதுரை ஆதீனத்தின் ஓட்டுநர் செல்வக்குமாரிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தினார்.

டிஎஸ்பி: உங்கள் பெயர் என்ன?
டிரைவர்: செல்வக்குமார்
டிஎஸ்பி: உங்களுடைய சொந்த ஊர் எது?
டிரைவர்: மதுரை மாவட்டம் அவனியாபுரம்.
டிஎஸ்பி: எத்தனை வருடமாக ஆதீனத்திடம் ஓட்டுநராக வேலை செய்கிறீர்கள்?
டிரைவர்: ஆறு வருடமாக ஆதீனத்துடன் இருக்கிறேன். கடந்த மூன்று வருடமாக ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன். p police investigate five hoursolice investigate five hours
டிஎஸ்பி: உங்களிடம் லைசன்ஸ் இருக்கிறதா?
டிரைவர்: இருக்கிறது சார்… ( லைசன்ஸை எடுத்து காண்பித்தார்)
டிஎஸ்பி: என்ன படித்திருக்கிறீர்கள்?
டிரைவர்: பி.ஏ.பி.எல், படித்திருக்கிறேன். police investigate five hours
டிஎஸ்பி: ரெகுலர் கோர்ஸா? இல்லை கரஸா (தொலைதூர படிப்பா)?
டிரைவர் செல்வக்குமார் சிறிது நேரம் பதில் சொல்லாமல் யோசித்துக்கொண்டே இருந்தார்
டிஎஸ்பி பார்த்திபன்: என்ன யோசிக்கிறீங்க? ஞாபகம் இல்லையா? எந்த காலேஜ்ல படிச்சோம்னு யோசிக்கிறீங்களா?
டிரைவர்: கரஸ்ல (தொலைதூர படிப்பு) தான் சார் படித்தேன்.
டிஎஸ்பி: பி.ஏ மட்டும் தான் கரஸ்ல படிச்சிங்களா? இல்லை பி.எல் படிப்பும் கரஸ்ல தான் படிச்சீங்களா?
டிரைவர்: பி.ஏ., பி.எல்., இரண்டுமே கரஸ்ல தான் படிச்சேன் சார்.
விசாரணையின் தொடக்கத்தில், கம்பீரமாக சேரில் உட்கார்ந்து டிஎஸ்பி-யின் கேள்விகளுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி பதில் சொல்லி வந்த டிரைவர், டிஎஸ்பி துருவித்துருவி கேள்வி கேட்டதால் சற்றே தளர்ந்து போய் சேரின் முனைக்கு வந்தார்.
டிஎஸ்பி: கார் விபத்து நடந்தது எப்படி?
டிரைவர்: நான் சரியாக தான் கார் ஓட்டி வந்தேன். மற்றொரு காரில் வந்தவர்கள் தான் எங்களை நோக்கி மோதுவது போல வந்தனர்.
டிஎஸ்பி: நீங்க எவ்வளவு வேகத்தில் வந்தீர்கள்?
டிரைவர்: குறைவான வேகத்தில் தான் வந்தோம்.
டிஎஸ்பி: அந்த இடத்தில் எவ்வளவு வேகத்தில் போக வேண்டும் என்று தெரியுமா?
டிரைவர்: தெரியும், சார்.
டிஎஸ்பி: சரியா எத்தனை கி.மீ வேகத்தில் வந்தீர்கள்?
டிரைவர்: தெரியவில்லை சார். ஆனால், குறைவான வேகத்தில் தான் வந்தேன்.
டிஎஸ்பி: சிசிடிவி கேமரா காட்சிகளை டிவியில் பார்த்தீர்களா?
டிரைவர்: இல்லை சார்.
டிஎஸ்பி: விபத்துக்கு காரணம் யார்?
டிரைவர்: எதிரில் வந்தவர் தான் காரணம்
டிஎஸ்பி பார்த்திபனின் ஒவ்வொரு கேள்விகளையும், கிளைக் கேள்விகளையும் எதிர்கொள்ள முடியாமல் டிரைவர் செல்வக்குமார் திணறினார்.

கடைசியாக, லைசன்ஸ், ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் நகல் இதையெல்லாம் டிஎஸ்.பி கேட்டதும் டிரைவர் கொடுத்தார். அவருடைய வாக்குமூலத்தையும் கையைழுத்தையும் பெற்றுக்கொண்டு சிறிது நேரம் காத்திருக்க சொன்னார்கள். police investigate five hours
டிரைவரிடம் நடத்திய விசாரணை தொடர்பான தகவல்களை மேலிடத்திற்கு தெரியப்படுத்திவிட்டு, அவர்களின் அனுமதிக்காக டிஎஸ்பி பார்த்திபன் காத்திருந்தார்.
அந்த நேரத்தில் காவல்நிலையத்தில் இருந்த டிரைவர் செல்வக்குமார் ஒருவேளை நம்மை ரிமாண்ட் செய்துவிடுவார்களோ என்று பயம் கலந்த பீதியுடன் இருந்தார். இதே பரபரப்பு ஆதீனம் தரப்பு வழக்கறிஞர்களிடமும் தொற்றிக்கொண்டது. இதனையடுத்து 5 மணி நேரத்திற்கு பிறகு காவல்நிலையத்தில் இருந்து டிரைவர் விடுவிக்கப்பட்டார். police investigate five hours