ADVERTISEMENT

கூட்டணி நகர்வுகள் – ராமதாஸின் அடுத்த கட்டம் என்ன?

Published On:

| By Kavi

கூட்டணி தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. பாமக தலைவர் அன்புமணி அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.

ADVERTISEMENT

ஆனால் இந்த கூட்டணி செல்லாது என கூறியிருக்கும் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இன்னும் யாருடன் கூட்டணி என்று அறிவிக்கவில்லை.

அதேசமயம் விருப்பமனு பெற்று நேர்காணல் நடத்தி வருகிறார்.

ADVERTISEMENT

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கான  வேட்பாளர் நேர்காணல் தைலாபுரத்தில் இன்று(ஜனவரி 31) நடைபெற்றது.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  “ இன்று 13 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படுகிறது. நாளையும், நாளை மறுநாளும் நேர்காணல் நடைபெறும்.

ADVERTISEMENT

கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அது குறித்து விரைவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்” என்றும் கூறினார்.

கடந்த காலங்களைப் போல அதிக இடங்களைப் பெற முடியுமா என்ற கேள்விக்கு, “நம்பிக்கையின் அடிப்படையில் தான் உலகம் இயங்குகிறது” என்று கூறினார்.

இந்நிலையில் பாமகவுக்குள் நீடிக்கும் உட்கட்சிப் பூசல் மற்றும் சிக்கல்கள் கூட்டணி அமைப்பதில் பெரும் தடையாக இருந்து வருவதாக ராமதாஸ் தரப்பு கூறுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share