பாமக தலைவர் அன்புமணிதான் : தேர்தல் ஆணையம் அதிரடி!

By Kavi

|

Published on 28 Nov 2025, 9:27 PM

பாமக தலைவர் அன்புமணிதான் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனரும் தந்தையுமான ராமதாஸுக்கும் தலைவரும் மகனுமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. 

ADVERTISEMENT

இந்த நிலையில் பாமகவுக்கு தான்தான் தலைவர், தங்கள் தரப்புக்கே கட்சியின் சின்னமான மாம்பழம் ஒதுக்கப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம் அனுப்பினார். 

இந்த கடிதத்துக்கு தேர்தல் ஆணையம் நேற்று பதிலளித்துள்ளது. 

ADVERTISEMENT

ராமதாஸுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர். அக்கட்சி நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளனர் அதற்கான தரவுகள் உள்ளன என்று தெரிவித்துள்ளது. 

இந்த கடிதத்தால் ராமதாஸ் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

ADVERTISEMENT

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, “அன்புமணி 2023 பொதுக்குழுவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . 2026 வரை தலைவராக நீடிப்பார் என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. 

ஆனால் 2022 ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி திருவேற்காட்டில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தான் அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இதையடுத்து மே 29ஆம் தேதி அன்புமணி ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். 

அப்படி எனில் அவரது பதவி காலம் மூன்று ஆண்டுகளில் முடிந்து விட்டது.. 

ஆனால் 2023 ஆம் ஆண்டு தான் பொதுக்குழு நடந்ததாகவும் அதில் அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறி அவரது பணி 2026 வரை நீடிக்கும் என்றும் தேர்தல் ஆணையம் கூறி இருக்கிறது.

அன்புமணி தரப்பு போலியான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்திருக்கிறது. அவர்களோடு சேர்ந்து மோசடி செய்த தேர்தல் ஆணையத்தை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel