பாமக டூ அதிமுக… விலகும் தொண்டர்கள்!

Published On:

| By Selvam

pmk cadres joined aiadmk in villupuram

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் தொடர்ச்சியாக கட்சியில் இருந்து நீக்கி வருகிறார். தன்னுடைய மூச்சுக்காற்று நிற்கும் வரை நானே தலைவராக தொடர்வேன் என்றும் ராமதாஸ் நேற்று (ஜூன் 13) தெரிவித்தார். pmk cadres joined aiadmk in villupuram

இந்தசூழலில், அன்புமணி ராமதாஸ் வரும் ஜூலை 15-ஆம் தேதி முதல் 100 நாட்கள் நடைபயணம் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார். தந்தை, மகன் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல், பாமக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் ராமதாஸை விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பாமகவில் ஏற்பட்டுள்ள இந்த சலசலப்பு காரணமாக, கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில் பாமக விவசாய அணி தலைவர் வீராசாமி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் பாமகவில் இருந்து விலகி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையில் இன்று (ஜூன் 14) அதிமுகவில் இணைந்தனர். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. pmk cadres joined aiadmk in villupuram

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share