பாமக வழக்கறிஞர் பாலு பதவி பறிப்பு!

Published On:

| By Selvam

pmk balu posting removed from pmk

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருவரும் தனித்தனியாக மாவட்ட செயலாளர்களை சந்தித்து, ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். pmk balu posting removed from pmk

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக கட்சியில் இருந்து ராமதாஸ் சிலரை நீக்கி வருகிறார். அவர்கள் நீக்கப்பட்ட சில நிமிடங்களில் மீண்டும் அவர்கள் அப்பதவியிலேயே தொடர்வதாக அன்புமணி அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

இந்தநிலையில், பாமக சமூகநீதி பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலுவை நீக்கி, அவருக்கு பதிலாக வழக்கறிஞர் கோபு நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, மாநில துணைத் தலைவராக திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ ரவிராஜ், திருவள்ளுவர் வடக்கு மாவட்ட அமைப்பு செயலாளராக ராசா சங்கர், கடலூர் வடக்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளராக வினோத் ஆகியோரை புதிதாக ராமதாஸ் நியமித்துள்ளார். pmk balu posting removed from pmk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share