தேஜாஸ் விமானத்தில் மோடியின் ‘தம்ஸ் அப்’ பயணம்!

Published On:

| By Manjula

வெற்றிகரமான பயணம் என தேஜாஸ் விமானத்தில் பறந்தது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள், இலகு ரக போர் விமானங்கள், இலகு ரக ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை தயாரித்து, வடிவமைத்து தருகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இலகுரக போர் விமானம் தயாரிப்பில் எச்.ஏ.எல் நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் அங்கு நடைபெற்று வரும் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய, பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 25) காலை எச்.ஏ.எல் நிறுவனத்துக்கு வருகை புரிந்தார். ஆய்வுக்கு பின் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில் ஏறி பறந்தார். அவர் தேஜாஸ் விமானத்தில் பயணம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளத்தில், ” தேஜாஸ் விமான பயணம் வெற்றிகரமாக அமைந்தது. இந்த அனுபவம் உள்நாட்டு உற்பத்தி திறன்கள் மீதான எனது நம்பிக்கையை உயர்த்தியது. நம்முடைய தேசத்தின் திறன்கள் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

-மஞ்சுளா 

கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல சீரியல் நடிகை?

அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையை வாங்கிய MGM

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share