பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 100.
பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டார்.
இந்த தகவல் அறிந்து பிரதமர் மோடி மேத்தா மருத்துவமனைக்கு நேரில் சென்று தாயாரைச் சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவர்களிடமும் தாயாரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
மருத்துவமனையில் ஒன்றரை மணி நேரம் இருந்த பிரதமர் மோடி பின்னர் அங்கிருந்து டெல்லி புறப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரதமரின் தாயார் இன்று காலமானார். இந்த தகவலை மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
அந்த பதிவில் ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு இறைவனடி சேர்ந்தது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
