அமித்ஷாவின் மீனாட்சி அம்மன் கோவில் பூஜை பலிக்கிறதா? மீண்டும் வெடிக்கும் பிரதமர் மோடியின் ஓய்வு பஞ்சாயத்து!

Published On:

| By Mathi

PM Modi Retirement Buzz

பிரதமர் நரேந்திர மோடிக்கு வரும் செப்டம்பரில் 75 வயதாகிறது என்பதால் பதவியில் இருந்து விலகி ஓய்வு முடிவை அறிவிப்பாரா? என உத்தவ் தாக்கரே சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார். Modi Amit Shah

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 75 வயதாகிவிட்டால் ஓய்வு பெற்று விடுங்கள்.. அடுத்தவர்களுக்கு வழிவிடுங்கள் என கூறியிருந்தார்.

ADVERTISEMENT

மோகன் பகவத்தின் இந்த பேச்சை சுட்டிக்காட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு வரும் செப்டம்பரில் 75 வயதாகிறது; அதனால் பிரதமர் நரேந்திர மோடியும் பதவி விலகி ஓய்வு முடிவை அறிவிப்பாரா? என சஞ்சய் ராவத் எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் பாஜகவின் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட தலைவர்களுக்கு 75 வயதாகிவிட்டதால் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது; அதைப் போல பிரதமர் மோடிக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுமா? என்றும் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடிக்கு செப்டம்பர் 17-ந் தேதி 75 வயதாகிறது. இதனால், பாஜகவின் வழக்கப்படி மோடி பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என ஏற்கனவே சஞ்சய் ராவத் கூறியிருந்தார்.

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இதே போல கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் பாஜகவினரோ, பிரதமர் மோடிக்கு மட்டும் 75 வயது என்பது விதிவிலக்கு என கூறியிருந்தார்.

ADVERTISEMENT

அதேநேரத்தில், பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வியும் விவாதங்களும் நடைபெறும் நிலையில், “பிரதமராக அமித்ஷா செய்யும் பூஜை… வரவேற்கும் பிடிஆரின் அம்மா… 25 நிமிட மீனாட்சி மர்மம்!”என கடந்த ஜூன் 6-ந் தேதி நமது மின்னம்பலம் இணையதளத்தில் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share