பிரதமர் மோடி 75-வது பிறந்த நாள்: திரவுபதி முர்மு, டிரம்ப், ஸ்டாலின் வாழ்த்து- பாஜகவினர் சிறப்பு வழிபாடு!

Published On:

| By Mathi

Modi Birth Day

பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு (செப்டம்பர் 17) ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளை பாஜகவினர் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கோவில்களில் பாஜகவினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

ADVERTISEMENT

ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்கா 50% வரி விதித்த பின்னர் பிரதமர் மோடியை முதல் முறையாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் டிரம்ப். தமக்கு வாழ்த்து தெரிவித்த டிரம்ப்-க்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

ADVERTISEMENT

பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share