மோடி அரசின் 5-வது சர்ஜிகல் ஸ்டிரைக் ‘ஆபரேஷன் சிந்தூர்’

Published On:

| By Minnambalam Desk

PM Modis 5th surgical strike
M Modis 5th surgical strike

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் படுகொலைத் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதலை நடத்தி உள்ளது. Operation Sindoor என்ற பெயரிலான இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதலானது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் 5-வது ராணுவ நடவடிக்கை. PM Modis 5th surgical strike

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் கோலோச்சாத காலத்திலேயே இத்தகைய துல்லிய தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையில் 6 துல்லிய தாக்குதல்களை இந்திய ராணுவம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. PM Modis 5th surgical strike

ADVERTISEMENT

2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பிரதமரான பின்னர் சர்ஜிக்கல் ஸ்டிரைக் அல்லது துல்லிய தாக்குதல் நடவடிக்கைகள் அதிகம் பேசப்படுகிறது.

2015-ம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதக் குழுவினர், ராணுவத்தினர் மீது கடுமையான தாக்குதலை நடத்தினர். மணிப்பூரின் சாந்தெல் மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதலில் 15 ராணுவத்தினர் மரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் மணிப்பூரை ஒட்டிய மியான்மர் நாட்டுக்குள் நுழைந்து இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக்- துல்லிய தாக்குதலை நடத்தியது. இதில் வடகிழக்கு மாநில ஆயுத குழுக்களின் முகாம்கள் அழிக்கப்பட்டன, தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ADVERTISEMENT
PM Modis 5th surgical strike

2016-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் ஊரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் மேற்கொள்ளப்பட்டதுதான் URI சர்ஜிக்கல் ஸ்டிரைக். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்குள் ஊடுருவி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதே 2016-ல் ஜம்மு காஷ்மீர் எல்லையிலும் ஒரு துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதிகமாக பேசப்பட்ட பால்கோட் சர்ஜிக்கல் ஸ்டிரைக்
2019-ல் நடத்தப்பட்டது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவத்தினர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பால்கோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 300-க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து தற்போது Operation Sindoor என்ற பெயரில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக்- துல்லிய தாக்குதலை ராணுவம் நடத்தி உள்ளது. இந்தத் தாக்குதல் பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகால ஆட்சியில் நடத்தப்பட்ட 5-வது சர்ஜிக்கல் ஸ்டிரைக். PM Modis 5th surgical strike

PM Modis 5th surgical strike
PM Modis 5th surgical strike
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share