கார்களின் மதிப்பு மட்டும் 40 ஆயிரம் கோடி … புருனே சுல்தானின் வியக்க வைக்கும் வாழ்க்கை!

Published On:

| By Kumaresan M

இந்தியா – புருனே இடையே நட்புறவு ஏற்பட்டு 40  ஆண்டுகள் ஆவதையொட்டி பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக இன்று (செப்டம்பர் 3) காலை புருனே  சென்றடைந்தார்.  அங்கு புருனே சுல்தான் ஹசனல் போல்க்கையாவை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு குறித்து விவாதித்தார்.  இதன்மூலம் புருனே நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.

புருனே தருஸ்ஸலாம் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. புருனே தலைநகர் பண்டார் செரி பெகவானில் பிரதமர் தங்கியுள்ளார். புருனே நாட்டு மன்னர் ஹாசனல் போல்கியா வசிக்கும் இஸ்தானா நூருல் இமான் என்ற மாளிகைக்கும் பிரதமர் மோடி சென்றார். உலகிலேயே அதிக  விலை மதிப்பு கொண்ட அரண்மனை இது.

ADVERTISEMENT

இந்த அரண்மனையில் 1,700 அறைகள் உள்ளன. 2 மில்லியன் சதுர அடி பரப்பளவில் இந்த அரண்மனை பரந்து விரிந்து அமைந்துள்ளது. 22 கேரட் தங்கத்தில் செய்யப்பட்ட கோபுரமும் அரண்மனையில் உண்டு.

திரிபுரா போன்ற ஒரு மாநிலத்தின் பரப்பளவுதான் புருனே கொண்டிருந்தாலும் எண்ணெய் வளம் மிக்க நாடு ஆகும். அதனால், செல்வத்தில் மக்கள் திளைக்கின்றனர். கடந்த 1990 ஆம் ஆண்டுகளில் தயாரான ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் பாதியை புருனே மன்னர் குடும்பம்தான் வாங்கியதாகவும் சொல்லப்படுவது உண்டு.

ADVERTISEMENT

தங்க பிளேட் பொருத்திய ரோல்ஸ் ராய்ஸ் காரும் இவரிடத்தில் உண்டு. 450 பெராரி, 380 பென்ட்லி கார்களும் உள்ளன. இவரிடத்திலுள்ள கார்களின் விலை மதிப்பு மட்டும் 40 ஆயிரம் கோடி ஆகும்.  புருனே மன்னரிடத்தில் ‘ஃபிளையிங் பேலஸ்’ என்ற பெயரில் போயிங் 747-400 ரக  விமானம் உள்ளிட்ட ஏராளமான விமானங்கள் உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ADVERTISEMENT

எம்.குமரேசன்

காசி படத்தில் நடித்த பிறகு, பார்வையில்லாமல் போய் விட்டது!- நடிகர் விக்ரம் சொல்லும் காரணம்

நிதி மோசடி வழக்கு… தேவநாதனுக்கு செப்டம்பர் 17 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share