நவ.26.. நாடாளுமன்றத்தில் இன்று ‘அரசியல் சாசன தின’ கொண்டாட்டம்

By Mathi

|

Published on 26 Nov 2025, 7:34 AM

Constitution Day

அரசியல் சாசன தின கொண்டாட்டம் நாடாளுமன்ற மைய மண்பத்தில் இன்று நவம்பர் 26 அன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த அரசியல் சாசன தின கொண்டாட்டத்தில்
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்த ஆண்டு, அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 76-ம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

ADVERTISEMENT

இக்கொண்டாட்ட நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர், குடியரசு துணைத் தலைவர், மக்களவைத் தலைவர், நாடாளுமன்ற இரு அவையின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் அரசியல் அமைப்பின் முகவுரையை வாசிக்க உள்ளார். மேலும், அரசியல் சாசனத்தின் மொழிப்பெயர்ப்பு, மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, போடோ, காஷ்மீரி, தெலுங்கு, ஒடியா, அசாமி ஆகிய 9 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel