குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலையை ஸ்பெயின் பிரதமருடன் சேர்ந்து பிரதமர் மோடி நாளை (அக்டோபர் 28) தொடங்கி வைக்கிறார்.
ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று (அக்டோபர் 27) வந்தார். நாளை பிரதமர் நரேந்திர மோடியுடன் குஜராத் செல்கிறார். அங்கு வதோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடியும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்செசும் சேர்ந்து திறந்து வைக்கின்றனர்.
இந்த வளாகத்தில் ராணுவத்துக்கு தேவையான சி-295 ரக சரக்கு விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இது இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தியில் மிகச்சிறந்த மைல்கல் ஆகும். இந்த ஆலைக்கு பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக, ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்துடன் டாடா ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கனவே 56 சி-295 ரக விமானங்கள் 21,935 கோடி மதிப்பீட்டில் ஸ்பெயினில் இருந்து வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதில், 16 விமானங்களை ஸ்பெயின் நேரடியாக இந்தியாவுக்கு வழங்கும். மீதியுள்ள 40 விமானங்கள் குஜராத் தொழிற்சாலையில் தயாரித்து வழங்கப்படும். 2026 ஆம் ஆண்டு வதோரா தொழிற்சாலையில் இருந்து முதல் விமானம் வழங்கப்படும். 2031 ஆம் ஆண்டுக்குள் மீதி 39 விமானங்கள் இந்திய ராணுவத்திடம் வழங்கப்பட்டு விடும். தயாரிப்பு, அசெம்ப்ளி, பரிசோதனை., பராமரிப்பு அனைத்தும் இந்த தொழிற்சாலையிலேயே மேற்கொள்ளப்படும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்