கன்னட மொழி எழுத்தாளர் பானு முஸ்தாக், சர்வதேச அளவில் மிகவும் புகழ் பெற்ற புக்கர் விருதை பெற்றுள்ளார். சிறுகதை தொகுப்புக்காக முதல் முறையாக வழங்கப்பட்ட புக்கர் பரிசைப் பெற்றிருக்கிறார் கர்நாடகாவின் பானு முஸ்தாக். PM Modi Silent as Indian Intellectuals

1990-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை, பானு முஸ்தாக் கன்னட மொழியில் எழுதிய சிறுகதைகள், Hridaya Deepa (Heart Lamp என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டன. தீபா பஸ்தி, இந்த மொழிபெயர்ப்பை மேற்கொண்டிருந்தார். முஸ்லிம் பெண் என்ற அடையாளத்துக்காக ஒரு பெண்ணின் மீதான தாக்குதலை மையமாகக் கொண்ட பானு முஸ்தாக்கின் சிறுகதைக்குதான் தற்போது சர்வதேச புக்கர் பரிசு கிடைத்துள்ளது.
இத்தகைய விருது பெற்ற இந்திய எழுத்தாளர் பானு முஸ்தாக்கை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை பாராட்டவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி இப்போதுதான் என்றில்லை.. இதற்கு முன்னரும் இந்தியாவுக்கு இத்தகைய பெருமைகளைச் சேர்த்த ஆளுமைகளைப் புறக்கணித்திருக்கிறார்.
ராமன் மகாசேசே விருது பெற்ற ரவீஷ் குமார்

2019-ம் ஆண்டு இந்திய மூத்த பத்திரிகையாளர் ரவீஷ் குமார், ராமன் மகாசேசே விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தி மொழி மூத்த பத்திரிகையாளரான ரவீஷ் குமார், என்டிடிவி ரவீஷ் குமார் என அறியப்பட்டவர். 2019-ம் ஆண்டு ஆசியாவின் நோபல் பரிசாக போற்றப்படும் ராமன் மகாசேசே விருது பெற்றார்.
ரவீஷ் குமாருக்கு இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான், உயரிய விருது பெற்ற இந்திய பத்திரிகையாளர் ரவீஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ரவீஷ் குமார், வலதுசாரி சித்தாந்த எதிர்ப்பாளராக அறியப்பட்டவர்.

இதேபோல 2022-ல் சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்தியராக கொண்டாடப்பட்டார் எழுத்தாளர் கீதாஞ்சலி ஶ்ரீ. இந்த சர்வதேச புக்கர் பரிசை பெற்ற முதல் இந்திய மொழி எழுத்தாளர் கீதாஞ்சலி ஶ்ரீ. இவரது Ret Samadhi- ரெட் சமாதி என்ற நாவலில் ஆங்கிய மொழி பெயர்ப்பான டூம் ஆஃப் சாண்ட்- Tomb of Sand நூலுக்குதான் சர்வதேச புக்கர் விருது வழங்கப்பட்டது. இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட, பாகிஸ்தானின் இஸ்லாமிய ஆணுக்கும் இந்திய இந்து பெண்ணுக்கும் இடையேயான வாழ்வை விவரிக்கிற நாவல் இது.
இத்தகைய பெருமைக்குரிய விருது பெற்ற கீதாஞ்சலி ஶ்ரீ-க்கும் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து ஒரு வாழ்த்துச் செய்தி கூட கிடைக்கவில்லை.
பிரதமர் நரேந்திர மோடியின் இத்தகைய, ‘ஆளுமைகள் புறக்கணிப்பு’ பட்டியலில் இப்போது கர்நாடகாவின் மூத்த எழுத்தாளர் பானு முஸ்தாக் பெயரும் இடம் பெற்றிருக்கிறது.
கட்டுரை உதவி: https://thewire.in/politics/3-instances-when-pm-modi-has-not-congratulated-indians-for-international-recognition