திருச்சியில் மோடி- அமைச்சர் கே.என். நேரு, துரை வைகோ, எடப்பாடி பழனிசாமி, ஜிகே வாசன் வரவேற்பு- PHOTO GALLERY

Published On:

| By Mathi

பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். திருச்சியில் பிரதமர் மோடியை அமைச்சர் கே.என்.நேரு, துரை வைகோ எம்பி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மாலத்தீவுகளில் இருந்து நேரடியாக இன்று ஜூலை 26-ந் தேதி தூத்துக்குடி வருகை தந்தார் பிரதமர் மோடி. தூத்துக்குடியில் ரூ4,900 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தும் நாட்டுக்கு அர்ப்பணித்தும் பிரதமர் மோடி உரையாற்றினார்.

ADVERTISEMENT

தூத்துக்குடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, திருசசி மக்களவைத் தொகுதி எம்பி துரை வைகோ, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கேபி முனுசாமி, எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவ ஜிகே வாசன் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

திருச்சியில் நட்சத்திர விடுதியில் இன்று இரவு தங்கும் பிரதமர் மோடி, ஜூலை 27-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று ஹெலிகாப்டர் மூலமாக அரியலூர் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலுக்கு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

ADVERTISEMENT

அதிமுக- பாஜக கூட்டணி அமைந்த பின்னர் முதல் முறையாக தமிழகம் வந்த மோடியை அதிமுகவின் தலைவர்கள் விமான நிலையத்தில் வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் மோடி- PHOTO GALLERY

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share