ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் பிரதமர் மோடி

Published On:

| By Selvam

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் உள்ள மறைந்த ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஹெட்கேவர், கோல்வால்கர் நினைவிடங்களில் பிரதமர் மோடி இன்று (மார்ச் 30) மரியாதை செய்தார்.

இந்த நிகழ்வின் போது மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் உடனிருந்தார். Modi pay tributes Gedkevar

கடந்த ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் திறப்பு நிகழ்ச்சிக்கு பிறகு, பொதுவெளியில் மோடி மற்றும் மோகவன் பகவத் இன்று சந்தித்தனர். ஓராண்டுக்கு பிறகு நடந்துள்ள இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு மோடி தனது கைப்பட அங்குள்ள விசிட்டர்ஸ் புத்தகத்தில் இந்தியில் எழுதியுள்ள குறிப்பில்,

“ஹெட்கேவர் மற்றும் கோல்வால்கர் ஆகியோருக்கு எனது மனமார்ந்த மரியாதையை செலுத்துகிறேன். அவர்களின் நினைவுகளைப் பாதுகாக்கும் இந்த நினைவுக் கோயிலைப் பார்வையிட்ட பிறகு நான் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டேன்.

இந்திய கலாச்சாரம், தேசியவாதத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த புனித இடம், தேச சேவையில் முன்னேற நம்மை ஊக்குவிக்கிறது. இந்த இடத்துடன் தொடர்புடைய அனைத்து சிறந்த ஆளுமைகளின் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும், தேசத்திற்கு சேவை செய்ய அர்ப்பணிப்புடன் செயல்படும் மில்லியன் கணக்கான தன்னார்வலர்களுக்கு ஆற்றலின் ஆதாரமாக செயல்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் லட்சக்கணக்கான தனது ஆதரவாளர்களுடன் அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறிய நாக்பூர் தீக்‌ஷாபூமிக்கு சென்று பிரதமர் மோடி அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார். Modi pay tributes Gedkevar

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share