அரசு நிகழ்ச்சி மற்றும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் மோடி சென்னை வந்தார்.
2024ஆம் ஆண்டின் பிரதமரின் முதல் பொது நிகழ்ச்சி தமிழ்நாட்டில் தான் தொடங்கியது. கடந்த ஜனவரி 2ஆம் தேதி தமிழ்நாடு வந்தார் பிரதமர்.
ஜனவரி மாதத்தில் 2 முறை தமிழகம் வந்து சென்றார். 3ஆவது முறையாக இரண்டு நாள் பயணமாகக் கடந்த 27ஆம் தேதி தமிழகம் வந்தார். தொடர்ந்து 4ஆவது முறையாக இன்று (மார்ச் 4) சென்னை வந்தார்
மகாராஷ்டிராவிலிருந்து சென்னைக்குத் தனி விமானம் மூலம் வருகை தந்தார். 2.50 மணிக்குப் பிரதமர் மோடியின் விமானம் சென்னை வருவதாக இருந்தது. ஆனால் 3.29 மணிக்குதான் சென்னை வந்தடைந்தது.
சென்னை வந்த பிரதமரை தமிழக அரசு சார்பில் அமைச்சர் காந்தி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
விமான நிலையத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார். அங்கு, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட விரைவு பெருக்கி உலை திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் சென்னை வருகிறார். அங்கிருந்து
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்துக்கு காரில் செல்லும் பிரதமர் மோடி, மாலை 5 மணியளவில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
திராவிடம் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது: ஆளுநர் ரவி
‘ராஜதந்திரம்’ – மோடி நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்துகொள்ளாதது ஏன்? ஆர்.எஸ்.பாரதி விளக்கம்!
