தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மோடி இன்று கலந்துரையாடல்!

Published On:

| By Selvam

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று (மார்ச் 29) நமோ செயலி மூலம்  கலந்துரையாடுகிறார்.

தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக, தேமுதிக கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி தொடர்ச்சியாக தமிழகத்திற்கு வருகை தந்து, பாஜக பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார். இந்தநிலையில், நமோ செயலி மூலமாக தமிழக பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை கலந்துரையாடுகிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “இன்று மாலை 5 மணிக்கு தமிழக பாஜக தொண்டர்களுடன் ‘எனது வாக்குச்சாவடி வலிமையானது’ என்ற தலைப்பில் உரையாட ஆவலாக காத்திருக்கிறேன்

தமிழ்நாட்டில் உள்ள நமது நிர்வாகிகள் மக்களுடன் பணியாற்றுவதும், நமது ஆட்சியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் பாராட்டுக்குரியது. திமுகவின் தவறான ஆட்சியால் சோர்ந்து போன தமிழகம், பாஜக மீது மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பில்கேட்ஸுக்கு மோடி கொடுத்த தூத்துக்குடி பரிசு!

சென்னை மதுபான விடுதி விபத்து: மேலாளர் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share