புதிய விமான முனையத்தை திறந்து வைத்தார் மோடி

Published On:

| By Selvam

சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 2.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தார்.

அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.

ரூ.2,467 கோடி மதிப்பீட்டில் விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை, கோவை வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து ராமகிருஷ்ணா மடத்தின் 125-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.

மாலை 6.30 மணியளவில் பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் தாம்பரம் – செங்கோட்டை ரயில் சேவையை துவக்கி வைத்த பின்னர் இரவு 7.45 மணியளவில் தனி விமானம் மூலம் மைசூருக்கு செல்கிறார்.

செல்வம்

பிரதமர் வருகை: காங்கிரஸ் கட்சியினர் ஹவுஸ் அரஸ்ட்!

சென்னை வந்தார் மோடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share