தூத்துக்குடியில் பிரதமர் மோடி! பொதுக்கூட்டத்தில் திமுக- பாஜகவினர் போட்டி முழக்கங்களால் பதற்றம்!

Published On:

| By Mathi

Modi Thoothukudi BJP DMK

பிரதமர் நரேந்திர மோடி இன்று தூத்துக்குடியில் பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள திமுக, பாஜகவினர் எழுப்பிய போட்டி முழக்கங்களால் பதற்றம் நிலவுகிறது.

பிரதமர் மோடி ரூ4,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க தூத்துக்குடி வருகை தந்துள்ளார். மாலத்தீவுகளில் இருந்து தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி நேரடியாக இன்று ஜூலை 26-ந் தேதி இரவு வந்தடைந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழ்நாடு ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் மோடியை வரவேற்றனர்.

பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோரும் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், டிஆர்பி ராஜா, அனிதா ராதா கிருஷ்ணன், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மற்றும் பாஜக தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றுள்ளனர். பாஜகவினர் தங்களது கட்சி கொடியுடனான துண்டுகளை கைகளில் சுழற்றியபடி மோடி மோடி என முழக்கமிட்டனர். இதற்கு போட்டியாக திமுகவினரும் தங்களது கட்சி துண்டுகளை கைகளில் சுழற்றியடி ஸ்டாலின் ஸ்டாலின் என முழக்கமிட்டனர். இரு கட்சிகளின் தொண்டர்களும் போட்டி போட்டு முழக்கங்கள் எழுப்பியதால் இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பதற்றம் நிலவுகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share