19 வது ஆசியான் – இந்தியா உச்சி மாநாடு லாவோ நாட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போது தாய்லாந்து பிரதமர் பெடோங்டார்ன் ஷினவத்ராவைப் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இரு பிரதமர்களும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
தாய்லாந்து பிரதமராக பதவியேற்றதை முன்னிட்டு பெடோங்டார்ன் ஷினவத்ராவுக்குப் பிரதமர் மோடியும், மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடிக்கு ஷினவத்ராவும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “தாய்லாந்து இந்தியாவின் நட்பு நாடு. இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது மற்றும் கலாச்சார தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம். பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து, டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் மற்றும் பல துறைகளிலும் நாங்கள் சிறந்த நோக்கத்தை செயல்படுத்த உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல, லாவோ நாட்டின் மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் செயலாளரும், லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் அதிபருமான தோங்லூன் சிசோலித்தை பிரதமர் மோடி, வியன்டியானில் இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, ஆசியான் உச்சி மாநாட்டையும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தியதற்காக சிசோலித்தை மோடி பாராட்டினார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முதல் இன்னிங்சில் 556 ரன்கள்… சொந்த மைதானத்தில் நொந்த பாகிஸ்தான்