பிரதமர் மோடியின் பிறந்தநாள் : தலைவர்கள் வாழ்த்து!

By Kavi

|

Published on 17 Sep 2023, 4:40 PM

பிரதமர் மோடி இன்று தனது 73ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். நாடு முழுவதும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

பிரதமரும் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவருமான நரேந்திர மோடி செப்டம்பர் 17, 1950ஆம் ஆண்டு பிறந்தார். இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி துவாரகாவில் மெட்ரோ ரயிலில் பயணித்து மக்களுடன் கலந்துரையாடி கொண்டாடினார். அப்போது பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ADVERTISEMENT

அதுபோன்று பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஹனுமன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.  அப்போது 73 கிலோவில் லட்டு தயாரிக்கப்பட்டு பிரசாதமாக வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் சிறுவர்கள் பிரதமர் மோடி முகம் பதித்த முகமூடிகளை அணிந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

ADVERTISEMENT

இதுபோன்று நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடந்து வரும் நிலையில் குடியரசுத் தலைவர், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
“உங்களின் தொலைநோக்குப் பார்வையாலும், வலுவான தலைமையாலும் இந்தியா ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சி காண வேண்டும். நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவும், உங்கள் அற்புதமான தலைமைத்துவம் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து பயன் அளிக்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்”

ADVERTISEMENT

அதுபோன்று துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கார், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என பாஜக அமைச்சர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
பிரதமர் மோடிக்கு தமிழக மக்களின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியத்துடன் அவர் நமது தேசத்தை வழிநடத்த பிரார்த்தனை செய்ய வேண்டும்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள். அவர் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகள்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
இரக்கம், அர்ப்பணிப்பு மற்றும் தைரியம் கொண்ட தலைமைப் பண்புகளை கொண்டவர். தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தனது கடின உழைப்பின் மூலம் நமது தேசத்தின் உணர்வை உயர்த்தியுள்ளார்.
அவரது பிறந்தநாளில், அவர் மற்றொரு வெற்றிகரமான பதவிக் காலத்தையும், நூறு வருட சேவையையும் பெற வாழ்த்துகிறேன்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
தமிழ் தன் தாய்மொழியாக இல்லையே, தன்னால் தமிழில் பேச முடியவில்லையே என்று பலமுறை வருத்தம் தெரிவித்தவர் பிரதமர் மோடி. உலக நாடுகளில் எல்லாம் நம் தமிழ் மொழியின் தொன்மையையும் பெருமையையும் எடுத்துக் கூறி மகிழ்ந்தவர் மோடி.

அவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் நம் நாட்டின் நன்மதிப்பையும் புகழையும் பெருமையையும் உயர்த்திக்கொண்டே இருக்கிறது. நான்… என்… எனது… என்ற சுயநலம் மிக்க அரசியல்வாதிகளையே பார்த்து பழகிய தமிழக மக்களுக்கு, நாம்… நம்… நமது… என்று நம்பிக்கை தந்தவர் மோடி.

பாமக நிறுவனர் ராமதாஸ்
அவர் அனைத்து நலன்களுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்; நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகமும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரியா

“தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை” – துரை வைகோ

ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி- தொடரும் செக்யூரிட்டி சர்ச்சைகள்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel