பிரதமர் பதவியில் இருக்கக் கூடிய நரேந்திர மோடியின் பேச்சுகள் ஒவ்வொரு நாளும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த வகையில் இன்று (மே 25) பீகாரில் உள்ள பாடலிபுத்திரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மோடியின் பேச்சு கேட்பவரை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
“இந்தியா கூட்டணி வேண்டுமானால் வாக்கு வங்கிக்காக அடிமைத்தனம் செய்யலாம். அவர்கள் வேண்டுமானால் அங்கு சென்று முஜ்ரா நடனம் ஆடலாம். நான் SC, ST, OBC ஒதுக்கீட்டில் உறுதியாக நிற்கிறேன் உயிரோடு இருக்கும் வரை போராடிக்கொண்டே இருப்பேன்” என்று பேசியிருக்கிறார் மோடி.
அவர் பயன்படுத்திய முஜ்ரா என்ற வார்த்தைதான் வட இந்திய அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முஜ்ரா என்றால் என்ன?
முஜ்ரா என்பது கவர்ச்சியான நடனம். இது முகலாய ஆட்சியின் போது தோன்றியது. நவாப்கள், பிரபுக்கள் மற்றும் இந்திய சமுதாயத்தின் உள்ளூர் ஆட்சியாளர்கள் தங்களது பொழுதுபோக்கிற்காக பெண்களை பயன்படுத்தினார்கள். அப்படி விலை மாதர்கள் ஆடும் அந்தரங்க கவர்ச்சி நடனம்தான் முஜ்ரா. பிற்காலத்தில் முஜ்ரா நடனம் படிப்படியாக விபச்சாரத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இது வட இந்தியாவில் பலரும் அறிந்ததுதான்.
இந்த பின்னணியில்தான் இந்தியா கூட்டணி, ‘முஜ்ரா’ நடனம் ஆடலாம் என்று பேசியிருக்கிறார் மோடி.
மோடியின் இந்த பேச்சுக்கு கோரக்பூரில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார்.
“பிரதமர் பதவியின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டியது அந்த பதவியில் இருக்கும் மோடியின் பொறுப்பு. பீகாரில் ஆற்றிய உரையின் போது, இதுவரை எந்த நாட்டின் பிரதமரும் பயன்படுத்தாத வார்த்தைகளை பிரதமர் மோடி பயன்படுத்தியிருக்கிறார்.
நாடு உங்கள் குடும்பம் போன்றது என்று கூறியுள்ளீர்கள். குடும்பத் தலைவராக இருப்பவர் குடும்ப உறுப்பினர்களிடம் இப்படித்தான் பேசுவதா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதுகுறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவிக்கையில், “பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சார மொழியின் தரமும், பாஜகவின் தொகுதிகளும் தொடர்ந்து சரிந்துகொண்டே வருகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிவசேனா (UBT) முக்கிய தலைவரான பிரியங்கா சதுர்வேதி, பிரதமர் மோடியின் வைரல் வீடியோ கிளிப்பைப் பகிர்ந்துகொண்டு, “மோடி ஜி, (get well soon) விரைவில் குணமடையுங்கள்” என்று கூறியுள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தள ராஜ்யசபா எம்.பி. மனோஜ் ஜா,
“நேற்று வரை, நாங்கள் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தோம், இப்போது அவரைப் பற்றி கவலைப்படுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்
–வேந்தன்
மோடி தெய்வமகன் கிடையாது: அம்பேத்கர் சுடர் விருது பெற்ற பிரகாஷ்ராஜ் விளாசல்!
Comments are closed.