காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: சவுதி பயணத்தில் இருந்து பாதியில் திரும்பும் மோடி

Published On:

| By Aara

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பிரதமர் மோடி தனது சவுதி அரேபிய பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு இன்றிரவே இந்தியா திரும்புகிறார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. ஆனாலும் எண்ணிக்கையை இதுவரை அரசு உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் இத்தாக்குதலைக் கண்டித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தக் கொடூரமான செயலுக்குப் பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறினார். PM cuts short Saudi visit after J&K attack

ADVERTISEMENT

பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சவுதி அரேபியாவில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் மோடி. இதையடுத்து அமித் ஷா இன்று மாலையே காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்குச் சென்றார். அங்கே பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகளோடு அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

இரண்டு நாள் பயணமாக இன்று சவுதி அரேபியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு ஜெட்டாவில் சவுதி அரேபியா ஏற்பாடு செய்திருந்த அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் கலந்து கொள்ள இருந்த நிலையில், விருந்தை ரத்து செய்துவிட்டு, தனது சவுதி அரேபிய பயணத்தையும் பாதியில் முடித்துக் கொண்டுள்ளார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, சவுதி இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மானை சந்திக்க அவர் திட்டமிடப்பட்டிருந்தார்.

ADVERTISEMENT

ஆனால் காஷ்மீர் தாக்குதலையடுத்து பிரதமர் இன்றிரவே இந்தியாவுக்கு புறப்பட்டு, புதன்கிழமை அதிகாலை வருவார் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மோடி டெல்லி திரும்பிய பிறகு ஏப்ரல் 23 புதன் காலை, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. PM cuts short Saudi visit after J&K attack

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, இறப்பு எண்ணிக்கை இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும், பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறினார். “சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை நோக்கி நடத்தப்பட்ட எந்தவொரு தாக்குதலையும் விட இந்தத் தாக்குதல் மிகப் பெரியது” என்று கூறினார் ஓமர். PM cuts short Saudi visit after J&K attack

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share