தாய் மரணம், தற்கொலை, விபத்து… மாணவர்களுக்கு நேர்ந்த துயரங்களும் பெற்ற மதிப்பெண்களும்!

Published On:

| By Kavi

 Plus Two students distress and scores

பிளஸ் 2 ரிசல்ட்  அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி, தேர்வு முடிவில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். Plus Two students distress and scores

கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.  இதில் 95.01சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

ADVERTISEMENT

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், படுகை புது தெருவை சேர்ந்த புண்ணியமூர்த்தி மகள் ஆர்த்திகா அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். 

 நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியிருந்தார்.

ADVERTISEMENT
Plus Two students distress and scores

இந்த நிலையில் சமீப நாட்களாக ஆர்த்திகா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. Plus Two students distress and scores

இந்த சூழலில் நேற்று வீட்டின் பின்புறத்தில் இருக்கும் மாட்டுக் கொட்டகையில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

ADVERTISEMENT

தேர்வு முடிவு அச்சத்தின் காரணமாகவே ஆர்த்திகா இவ்வாறு விபரீத முடிவை எடுத்துவிட்டார் என்று அவரது உறவினர்கள் கூறுகிறார்கள். 

இந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் சூழலில் ஆர்த்திகா, 413 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

தமிழில் 72, ஆங்கிலத்தில் 48, இயற்பியலில் 65, வேதியியலில் 78, தாவரவியலில் 70, உயிரியலில் 80 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். 

இந்த நிலையில் அவசரப்பட்டு ஆர்த்திகா எடுத்த முடிவை எண்ணி அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

இந்த பொது தேர்வில் சில துயர சம்பவங்களும் மாணவர்களுக்கு நடந்தன. பெற்றோரை இழந்த நிலையிலும் சில மாணவர்கள் பொது தேர்வை எழுத சென்றனர். 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த சுனில் குமார் என்ற மாணவரின் தாயார் பொது தேர்வு தொடங்கிய மார்ச் 3ஆம் தேதி அன்று உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். 

அப்போது தாய் இருந்த துக்கத்திலும் படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த மாணவர் சுனில் குமார் பொது தேர்வு எழுதிவிட்டு வந்து தனது தாய்க்கு இறுதிச்சடங்கு செய்தார். 

இந்த நிலையில் மாணவர் சுனில் குமார் பிளஸ் டூ தேர்வில் 375 மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். Plus Two students distress and scores

அதேபோல ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மாணவர் முகேஷ் பொதுத்தேர்வு எழுதி முடித்துவிட்டு விடுமுறையை கொண்டாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 8ம் தேதி பரமக்குடி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவர் பொது தேர்வில் 483 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share