திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டையில் தேர்வு எழுதுவதற்காக பள்ளி சென்ற மாணவியை பேருந்தில் ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் முனிராஜ் இன்று (மார்ச் 25) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். plus two Student chase
இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தொலைக்காட்சி செய்தியில் பேருந்தை நிறுத்தாததால் பின்னால் ஓடிய பிளஸ் 2 மாணவி தொடர்பான செய்தி இன்று வெளியிடப்பட்டது.
மேற்படி, வெளியான செய்தியில் குறிப்பிட்டுள்ள பேருந்து எண் TN32N2389, தடம் எண் 1C, வேலூர் மண்டலம், ஆம்பூர் கிளையில் இருந்து இயக்கப்பட்ட பேருந்தாகும்.
இன்று காலையில் இப்பேருந்து வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து நடை எடுத்து ஆலங்காயம் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது கொத்தகோட்டை கிராமம் பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவி ஒருவர் காத்திருந்தார். பேருந்து அந்த வழியாக வந்தபோது மாணவி பேருந்தை வழி மறித்தார். ஆனால், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றார். சிறிது தூரம் ஓடிச்சென்று மாணவி பேருந்தில் ஏறியுள்ளார்.
மாணவி பேருந்தில் ஏறுவதற்காக பேருந்தின் பின்னால் ஓடிச்சென்ற காட்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக இருந்த ஆம்பூர் பணிமனையை சார்ந்த பேருந்து ஓட்டுநர் முனிராஜ் (பணி எண் 42069) உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் மீது துறைரீதியான தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. plus two Student chase