பிளஸ் 2 தேர்வு முடிவு: எந்த மாவட்டம் முதலிடம்?

Published On:

| By indhu

Plus 2 exam result: Tirupur tops!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (மே 6) வெளியான நிலையில் தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்விற்கான முடிவுகள் இன்று (மே 6) வெளியானது. இதில் 94.56 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டவாரியான தேர்ச்சி விகிதம்:

அந்த வகையில், இன்று வெளியிடப்பட்டுள்ள 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் மாவட்ட வாரியாக பார்க்கும்போது, திருப்பூர் மாவட்டம் 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது.

தொடர்ந்து,

  • ஈரோடு – 97.42%
  • சிவகங்கை – 97.42%
  • அரியலூர் – 97.52%
  • கோவை – 96.97%
  • விருதுநகர் – 96.64%
  • பெரம்பலூர் – 96.44%
  • திருநெல்வேலி – 96.44%
  • தூத்துக்குடி – 96.39%
  • நாமக்கல் – 96.10%
  • தென்காசி – 96.07%
  • கரூர் – 95.90%
  • திருச்சி – 95.74%
  • கன்னியாகுமரி – 95.72%
  • திண்டுக்கல் – 95.40%
  • மதுரை – 95.19%
  • ராமநாதபுரம் – 94.89%
  • செங்கல்பட்டு – 94.71%
  • தேனி – 94.65%
  • சேலம் – 94.60%
  • சென்னை – 94.48%
  • நீலகிரி – 94.27%
  • கடலூர் – 94.36%
  • புதுக்கோட்டை – 93.79%
  • தருமபுரி – 93.55%
  • தஞ்சாவூர் – 93.46%
  • விழுப்புரம் – 93.17%
  • திருவாரூர் – 93.08%
  • கள்ளக்குறிச்சி – 92.91%
  • வேலூர் – 92.53%
  • மயிலாடுதுறை – 92.38%
  • திருப்பத்தூர் – 92.34%
  • காஞ்சிபுரம் – 92.28%
  • ராணிப்பேட்டை – 92.28%
  • கிருஷ்ணகிரி – 91.87%
  • திருவள்ளூர் – 91.32%
  • நாகப்பட்டினம் – 91.19%
  • திருவண்ணாமலை – 90.47%

இதேபோல, புதுச்சேரியில் 93.38 சதவீதமும், காரைக்காலில் 87.03 சதவீதமும் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Gold Rate: மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா?

7வது இடத்தில் ஆர்சிபி: பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பு என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share