Warner pleads with faceless thief
தனது காணாமல் போன பையை திரும்ப ஒப்படைக்கும்படி முகம் தெரியாத திருடனிடம் ஆஸ்திரேலிய வீரர் வார்னர் கெஞ்சும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், இந்திய சினிமா பாட்டுகளுக்கு ஆடும் ரீல்ஸ் வீடியோக்களால் இந்திய ரசிகர்களுக்கும் பிடித்த வீரராக இருப்பவர் டேவிட் வார்னர்.
இந்த நிலையில் நேற்று புத்தாண்டு தினத்தில் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியது.
அதன்படி சொந்த நாட்டில் இன்று துவங்க இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் அவர் ஓய்வு பெற உள்ளார்.
இதற்கிடையே டேவிட் வார்னர் சென்டிமென்டாக பயன்படுத்தி வந்த அவரது கிரிக்கெட் பை (kit backpack) திருடு போயுள்ளது.
அதில் மிகச்சிறந்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் இரண்டு பச்சை நிறத் தொப்பி இருந்தது. அதை அணிந்தே தனது கடைசி தொடரில் விளையாட இருந்தார்.
David Warner's Baggy Green cap stolen; he assures no action and offers a backpack as a reward for its safe return! @davidwarner31
Hope it's returned safely; a player's cap holds immeasurable value. 🤞 pic.twitter.com/4FwnmVGPX7
— Vipin Tiwari (@Vipintiwari952) January 2, 2024
இதனையடுத்து பையை திருடிய முகம் தெரியாத திருடனுக்கு வார்னர் உருக்கமான முறையில் வேண்டுகோள் விடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், “அனைவருக்கும் வணக்கம், இது எனது கடைசி முயற்சி. என் பையை யாரோ எடுத்துக்கொண்டார்கள். அது எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான ஒன்று. அந்த பையில் இருக்கும் எனது தொப்பியைத்தான் நான் விளையாடும் கடைசிப் போட்டியில் அணிய வேண்டும் என விரும்பினேன்.
அதில் எனது குழந்தைகளுக்காக வாங்கி வைத்திருந்த பரிசுப் பொருட்களும் உள்ளன. உங்களுக்கு அந்த பை தான் வேண்டுமென்றால், அதேபோல் என்னிடம் இன்னொரு பை உள்ளது. அதை என்னிடம் இருந்து வாங்கிக்கொண்டு அந்த பையை மட்டும் திருப்பிக் கொடுங்கள்.
இந்த வீடியோவை கண்டால் தயவுசெய்து சமூக ஊடகங்கள் மூலம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவையோ அல்லது என்னையோ தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று திருடனுக்கு கோரிக்கை வைத்துள்ளார் டேவிட் வார்னர்.
இதனையடுத்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி நிர்வாகம், கேப்டன் பேட் கம்மின்ஸ், பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் உள்ளிட்ட பலரும் வார்னரின் பையை திரும்ப கொடுத்துவிடும்படி திருடனுக்கு சமூகவலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Pre Release Event: தேதி அறிவித்த கேப்டன் மில்லர் படக்குழு!
40 மத்திய அமைச்சர்கள் 400 முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர் : மோடி
Warner pleads with faceless thief