திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று 5.40 மணி அளவில் ஏர் இந்தியா விமானம் 141 பயணிகளுடன் சார்ஜா புறப்பட்டது.
விமானம் நடுவானில் சென்ற போது திடீரென சக்கரங்கள் உள்ளே செல்லாததால் விமானத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கிளம்பிய சற்று நேரத்திலேயே மீண்டும் திருச்சி திரும்பிய நிலையில் தரையிறங்க முடியாமல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக 4,255 அடி உயரத்தில் வானிலேயே வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளன. தீயணைப்பு வாகனங்களும் கூடுதலாக வந்துள்ளன.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் உள்ளிட்டோர் விமான நிலையம் விரைந்துள்ளனர்.
மற்றொரு பக்கம் வானில் வட்டமடிக்கும் விமானத்தின் எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்கவும் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிவிடலாம். வட்டமடிப்பதை நிறுத்தி தரையிறக்கும் பணி தொடங்கியிருக்கிறது. யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இன்னும் சிறிது நேரத்தில் விமானம் தரையிறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தாய்லாந்து பிரதமருடன் மோடி ஆலோசனை!
அஞ்சுகத் தாயின் அன்பு ஆணை… செல்வத்துக்காகவே பிறந்த செல்வி… நெகிழ வைக்கும் கோபாலபுர காவியம்!