”தமிழ்நாட்டின் கடந்த 35 ஆண்டுகால அரசியலில் ஒரு மாற்றம் தேவை. அதற்கு உதவவே விஜய்யின் நண்பராக நான் இங்கு வந்துள்ளேன்” என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். pk challenge that he will more popular than dhoni
சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா இன்று (பிப்ரவரி 26) நடைபெற்றது. அதில் அக்கட்சித் தலைவர் விஜய்யுடன், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரும் பங்கேற்றார்.
அவருக்கு திருக்குறள் நூல் மற்றும் தந்தை பெரியார் சிலையை வழங்கி கௌரவித்தார் விஜய்.

முற்றுப்புள்ளி வைக்க பங்கேற்றுள்ளேன்! pk challenge that he will more popular than dhoni
தொடர்ந்து விழாவில் பிரசாந்த் கிஷோர் பேசுகையில், “இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்த தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி. கடந்த சில வாரங்களாக தவெக மற்றும் பிரசாந்த் கிஷோர் குறித்து பல்வேறு கருத்துகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன்.
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தவெகவுக்கு கிடைக்கும் வெற்றி என்பது என்னால் கிடைத்தது என்ற எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. தவெக தலைவர், கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரின் உழைப்புக்கும் கிடைக்கும் பரிசு தான் வரும் தேர்தலில் கிடைக்கும் வெற்றி. தவெக தொண்டர்களின் தேர்தல் பணிக்கு நான் உறுதுணையாக இருப்பேன்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு கட்சிக்கு பணியாற்றினேன். கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் வியூக வகுப்பாளர் பணியை நான் செய்யவில்லை.
ஆனால் இப்போது வந்திருக்கிறேன். எதற்கு?
விஜய்யின் நண்பராக வந்துள்ளேன்! pk challenge that he will more popular than dhoni
தமிழக வெற்றிக் கழகத்திற்கு Strategy செய்ய நான் வரவில்லை. நான் இங்கு தேர்தல் வியூக வகுப்பாளராக வரவில்லை. மாற்றத்தின் பிரதிநிதியான விஜய்க்கு என்னுடைய உதவி தேவை இல்லை.
விஜய்யை அரசியல் தலைவராக மட்டும் நான் பார்க்கவில்லை. அவர் தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக பார்க்கிறேன். தவெக தலைவர் விஜய்யின் நண்பராக நான் இங்கு வந்துள்ளேன்.
தமிழ்நாட்டின் கடந்த 35 ஆண்டுகால அரசியலில் ஒரு மாற்றம் தேவை. அதற்கு உதவவே விஜய்காக நான் இங்கு வந்துள்ளேன். அடுத்த ஆண்டு நீங்கள் பலர் அதிகாரம் உள்ளவர்களாக இருப்பீர்கள்.
நான் இந்தியா முழுவதும் பணியாற்றியுள்ளேன். ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் உள்ளது. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக நாடு முழுவதும் குஜராத் மாடலை பின்பற்ற வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
தோனியை விட பிரபலம் ஆவேன்! pk challenge that he will more popular than dhoni
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஊழல் இங்கே அதிகமாக உள்ளது. அதை ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மதக்கலவரத்திற்கு என்றுமே வழிவகுக்கக்கூடாது. அதே வாரிசு அரசியலையும் ஊக்குவிக்க கூடாது.
ஒவ்வொரு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றியடைய வைக்கும் பிகாரைச் சேர்ந்த தோனிக்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு அதிகம். நான் அடுத்த ஆண்டு தேர்தலில் தவெகவை வெற்றி பெற வைத்தால், தோனியை விடவும் நான் பிரபலம் ஆவேன்.
தவெக தோழர்களே நீங்கள் தைரியமாகவும், பொறுமையாகவும், முழு ஈடுபாட்டோடும் உழையுங்கள். உங்கள் கட்சி வெற்றி பெறும் என்பதில் எந்த மாற்றுக்கருத்து இல்லை” என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
