வரும் 2026ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளராக, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணி கட்சிகளும், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. மேலும் கூட்டணியில் பல கட்சிகளை இணைக்கும் முயற்சி நடந்து வருகிறது.
இந்நிலையில் தமிழக சட்டமன்ற்ற தேர்தலுக்காக 3 மத்திய அமைச்சர்கள் கொண்ட குழுவை பாஜக அறிவித்துள்ளது.
இதில் தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால் மற்றும் மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் உள்ளிட்டடோர் இணை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக பைஜெய்ந்த் பாண்டா நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்க்கது.

