தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றபோது, 5 முக்கியத் திட்டங்களை செயல்படுத்துவதில் கையெழுத்திட்டார். அதில் ஒன்றாக சாதாரண அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லாமல் இலவச பயணம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது பெண்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றது.
மாநகர அரசு பேருந்துகள் ஒரே வண்ணத்தில் இயங்குவதால், கட்டணம் செலுத்தி செல்லக் கூடிய டீலக்ஸ், சொகுசு பேருந்துகளில் பெண்கள் ஏறி விடுகின்றனர். இது பெண்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தியது. இந்த குழப்பங்களை போக்கும் வகையில், சாதாரண அரசு பேருந்துகளில் முன்பக்கம் மற்றும் பின்பக்கங்களில் பிங்க் நிற வண்ணம் பூசப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்தது.
சென்னையில் முதற்கட்டமாக, பிங்க் நிற வண்ணம் பூசிய 50 சாதாரண அரசு பேருந்து சேவை இன்று தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலகம் அருகே, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் துவங்கி வைக்கின்றனர்.
இந்த பிங்க் நிற பேருந்துகள் இயக்கப்படுவதன் மூலமாக, பெண்களுக்கு இலவச பேருந்துகளை அடையாளம் காண்பதில் உள்ள சிக்கல் தீர்ந்துவிடும்.
–செல்வம்
கடற்கரைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம்!