சென்னையில் பிங்க் ஆட்டோக்கள்: ஜிபிஎஸ் கருவியுடன் இயங்கும்!

Published On:

| By Kavi

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம் அடுத்த மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் இந்த ஆட்டோவில், ஜிபிஎஸ் கருவி மற்றும் வாகன கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Pink auto in chennai with gps

பெண்களுக்கான சுய தொழில் வேலைவாய்ப்பினை உருவாக்க தமிழக அரசு ரூ.2 கோடி செலவில் பிங்க் ஆட்டோ இயக்கும் இந்தத் திட்டத்துக்கு அரசு மானியமாக தலா ரூ.1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 ‘பிங்க் ஆட்டோ’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.

அதன்படி, சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதல்கட்டமாக பிங்க் ஆட்டோக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இந்த பிங்க் ஆட்டோக்கள் மார்ச் மாதம் முதல் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், பிங்க் ஆட்டோ திட்டம் தொடர்பாக தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய ஆட்டோ பிங்க் நிறத்தில் இருக்கும் என்றும் பெண்கள் மட்டும்தான் ஓட்டுநராக இருப்பார்கள் என்றும் அவர்கள் பிங்க் நிறத்தில் சீருடை அணிந்திருப்பார்கள் என்றும், மேலும் இந்த ஆட்டோவில் ஜி.பி.எஸ் மற்றும் வாகனம் இருக்கும் இடத்தைக் கண்டறியும் சாதனம் உள்ளிட்டவை இருக்க வேண்டும் என மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பிங்க் ஆட்டோ திட்டம் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் கருத்து தெரிவிக்கலாம் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. Pink auto in chennai with gps

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share