சபரிமலை விவகாரம் எதையும் பாதிக்காது – பினராயி விஜயன்

Published On:

| By Pandeeswari Gurusamy

சபரிமலை விவகாரம் எதையும் பாதிக்காது. அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதற்கு பக்தர்களின் முழு ஆதரவும் உள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 9ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் 70.9 சதவித வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 11) இரண்டாம் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. திருச்சூர், மலப்புறம், வயநாடு, பாலக்காடு, கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

64 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 12,931 வார்டுகளில் 1.53 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்நிலையில் இன்று கண்ணூர் மாவட்டத்தில் பினராயி கிராம பஞ்சாயத்தில் செரிகல் ஜூனியர் பள்ளியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வாக்களித்தார். வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 13ம் தேதி நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கோட்டையாக கருதப்படும் இடங்களில் கூட இடது ஜனநாயக முன்னணியை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். சபரிமலை விவகாரம் எதையும் பாதிக்காது. அரசு சரியான நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதால் பக்தர்களின் முழு ஆதரவு உள்ளது. இந்த விஷயத்தில் பாஜகவும் காங்கிரஸ் கூட்டணியும் ஒரே மாதிரி செயல்படுகின்றார்கள் என குற்றம் சாட்டினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share