கேரள முதல்வர் பினராயி விஜயன் வயநாடு பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சூரல்மலை, முண்டக்கை கிராமங்கள் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டன்.
இந்த திடீர் நிலச்சரிவால், முன்னூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சமீபத்தில், பிரதமர் மோடி வயநாட்டிற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களிடமும் உரையாடினார்.
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்த பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்க்கு, முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.6 லட்சம் நிவாரணமாகவும், நிவாரண முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு மாத வாடகையாக ரூ.6000 வழங்கப்படும் என்று அறிவித்தார். சொந்தக்காரர்களின் வீடுகளில் வசிக்கும் மக்களுக்கும் இந்த பணம் வழங்கப்படும் என்றார்.
மேலும், இந்த பேரிடரில், 60 சதவீதத்திற்கு மேல் உடல் ஊனமான நபர்களுக்கு ரூ.75,000, 40 முதல் 60 சதவீதம் உடல் ஊனமான நபர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றார்.
உயிரிழப்பைப் பற்றி “இதுவரை 233 உடல்களும், 206 உடல் பாகங்களும் மீட்கப்பட்டிருப்பதாக” பினராயி விஜயன் கூறினார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மேற்கு மாவட்டங்களில் இன்று கனமழை…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மேற்கு மாவட்டங்களில் இன்று கனமழை…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : மகனை தொடர்ந்து தந்தைக்கும் போலீஸ் காவல்!