குஜராத் கலவரத்தை பேசும் எம்புரான் : வலதுசாரிகளின் எதிர்ப்பும், பினராயி விஜயன் ஆதரவும்!

Published On:

| By christopher

pinararyi vijayan support empuraan

எம்புரான் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜக, சங் பரிவார் அமைப்புகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். pinararyi vijayan support empuraan

மலையாள நடிகர் மோகன்லால் கதாநாயகனாக, பிரித்விராஜ் சுகுமாறன் இயக்கி நடித்திருக்கும் ‘எல்2: எம்புரான்’ திரைப்படம் கடந்த 27ம் தேதி வெளியானது. இரண்டு நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் புதிய சாதனையை படைத்தது.

இந்த படத்தில் பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது 2002 ஆம் ஆண்டு அங்கு நடந்த கலவரம் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், காட்சிகளை நீக்கும்படி கோரினர்.

இதனை ஏற்று, எம்புரான் படத்தில் 17 இடங்களில் காட்சிகள் நீக்கப்பட படத் தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் மோகன்லாலும் தனது எக்ஸ் தளத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அவர், “ ஒரு கலைஞனாக, என்னுடைய எந்தப் படமும் எந்த ஒரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது பிரிவினர் மீது வெறுப்புணர்வைக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவது எனது கடமை. எனவே, எனது அன்புக்குரியவர்களுக்கு ஏற்பட்ட துயரத்திற்காக நானும் எம்புரான் குழுவினரும் உண்மையிலேயே வருந்துகிறோம். இப்படத்திலிருந்து இதுபோன்ற காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளோம்” என மோகன்லால் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எம்புரான் திரைப்படத்தை நேற்று பார்த்த கேரள முதல்வர் பினராயி விஜயன், அப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வலதுசாரி அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் மிக மோசமான இன அழிப்பு சம்பவத்தை ‘எம்புரான்’ படத்தில் காட்சியாக வைத்தது சங்க பரிவாரம், ஆர்.எஸ்.எஸ், பாஜகவை கோபமடையச் செய்துள்ளது. படத்திற்கு எதிராக பகிரங்கமாக மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர். இதன் எதிரொலியாக படத்தின் காட்சிகளை நீக்கும் நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பிரிவினைவாதத்திற்கு எதிராக பேசிய என்ற ஒரே காரணத்தால் ஒரு கலை படைப்பு அழிக்கப்படுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

இந்த நிலம் எப்போதும் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளை நிலைநிறுத்தியுள்ளது. படைப்பாற்றலை மௌனமாக்க முயற்சிக்கும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக நாம் நமது கூட்டுக் குரலை எழுப்புவது கட்டாயமாகும்” என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share